மிட்டாய் கவிதைகள்!

பிறந்தநாள் ஆத்திச்சூடி

July 20, 2013

birthday

அழகான நள்ளிரவில்
ஆசையான வாழ்த்துக்களால்
இரட்டிப்பான மகிழ்ச்சியோடு
ஈடில்லா பாசம் கண்டு
உறக்கம் கூட மறந்து போவாய்!
ஊக்கம் புதிதாய்ப் பெற்று
எதிர்பாராத வாழ்த்துக்களால்
ஏக்கம் எல்லாம் விட்டுப் போகும்
ஐக்கியமாகு உன் நட்புடன்,
ஒவ்வொரு பிறந்தநாளும்
ஓயாத நினைவாகி, வெண்ணிலவும்
ஒளவியம் கொள்ளும் உன் முன்னே இன்று!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்